சாரைப் பாம்பு சாம்பார்.. திருப்பத்தூர் இளைஞரின் கொடூரம்! வனத்துறை அதிரடி.. இப்போது கம்பி எண்ணுகிறார்
திருப்பத்தூர்: விஷமற்ற சாரைப் பாம்பை பிடித்து கொன்று, தோலுரித்து சமைத்து சாப்பிட்ட இளைஞர் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இந்த இளைஞர் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
பாம்புகள் இயற்கை சங்கிலியின் மிக முக்கிய கண்ணிகளாகும். பெருமளவில் விவசாயிகளுக்கு பாம்புகள் பேருதவி செய்கின்றன. ஆனால், பாம்பை கண்டாலே அடித்து கொல்லும் நிலைமை சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் திருப்பத்தூரில் நடந்திருக்கிறது. ராஜேஷ்குமார் எனும் இளைஞர் சாரைப் பாம்பு ஒன்றை அடித்து கொன்றிருக்கிறார். மட்டுமல்லாது அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்திருக்கிறார்.

மேலும் இதனை வீடியோவாக படம் பிடித்து சோஷியல் மீடியாக்களிலும் பதிவேற்றிருக்கிறார். இந்த வீடியோ டிரெண்டான நிலையில், வனத்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சாரைப் பாம்பு கறியை சமைத்து சாப்பிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக வன ஆர்வலர்கள் கூறுகையில், "நம்மில் பலரும் பாம்பை பார்த்தவுடன் அடித்து கொன்றுவிடுகிறோம். ஆனால் இப்படி கொல்வது சட்டப்படி குற்றம் என்று பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் 70 சதவிகிதம் விஷமற்றவை, 30 சதவிகிதம்தான் விஷமானவை. அதிலும் குறிப்பிட்ட 4 வகை பாம்புகள்தான் விஷம் கொண்டவை. நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவைதான் விஷம் கொண்டவை.
இந்த பாம்புகள் எல்லா நேரங்களிலும் விஷத்தை பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் Drybite எனப்படும் விஷமற்ற கடியைதான் கடிக்கின்றன. உதாரணமாக வீட்டில் இந்த பாம்புகள் இருக்கும்போது அதை வெளியேற்ற வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அடித்துக்கொல்கிறேன் என்று அது வெளியேற வாய்ப்பிருக்கும் வழிகளை எல்லாம் அடைத்துவிடும்போது அது சீற்றம் கொண்டு கடித்துவிடுகிறது. இது நிச்சயம் அதிக விஷத்தை செலுத்தும் கடியாகத்தான் இருக்கும்.
மற்றபடி வயலில் நடந்து செல்லும்பொது எதிர்பாராத நேரத்தில் எதிர்படும் பாம்புகள் நம்மை எச்சரிக்கவே சீற்றமடைகின்றன. பெரும்பாலும் பாம்புகள் நம்மை விட மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவையாகும். எனவே பாம்பை மிக அருகில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இப்படித்தான் பாம்புகளும் நமக்குமான உறவுகள் இருக்கின்றன. இது தவிர எலி மற்றும் பூச்சிகளை உட்கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கும் மிகுந்த உதவியாக இருக்கின்றன.
இப்படி இருக்கையில் இதை பார்த்தவுடன் அடித்துக்கொல்வது சட்டப்படி குற்றமாகும். காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் பாம்புகளை கொல்வதை தவறு என்றும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1972இல் அட்டவணை 1, பிரிவு சி-யின் கீழ் பாம்புகள் வருகின்றன. யானை, புலிகள் கூட இந்த பிரிவின் கீழ்தான் வருகின்றன. எனவே பாம்பை கொல்வது, உணவுக்காக வேட்டையாடுவது, தோலுக்காக வேட்டையாடுவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதற்காக 3-7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராததும் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறுகின்றனர். சாரைப் பாம்புகள் விவசாய நிலங்களில் எலிகளை கட்டுக்குள் வைத்திருக்க பெரும் உதவி செய்கிறது. இது விஷமற்றது என்பதால் இதனை எளிதாக சிலர் கொன்றுவிடுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications