இன்ஸ்பெக்டராக நடித்து மோசடி செய்த மத போதகர் கைது - தமிழகத்திலும் கைவரிசை
ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிவந்த "போலி இன்ஸ்பெக்டர்" கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோனின் மகன் சைமன் பி.பால். இவர், பந்தலூர் தாலுகா, நெல்லியாளம் பகுதியில் சாந்தி நிலையம் என்ற அமைப்பை வைத்து மதபோதகராக செயல்பட்டு வருகிறார்.
நேற்று மாலை, நீலகிரி மாவட்டம் தேவாலா அருகே உள்ள உப்பட்டி பகுதியில் நின்றுகொண்டிருந்த சைமனிடம், தேவாலா காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சைமனின் பையில் தமிழ்நாடு இளைஞர் காவல் படையின் ஆய்வாளர் அடையாள அட்டையும், கேரள காவல் துறையின் சீருடையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தில் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றுவதாக புகைப்படம் மற்றும் தகவல்கள் பதிவாகியிருந்தது.
இது குறித்து, விசாரணை செய்தபோது சைமன் கேரளத்திலும், தமிழகத்திலும் போலி இன்ஸ்பெக்டராக உலா வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவாலா காவல் துறையினர் சைமனை கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications