தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் திடீர் சஸ்பெண்ட் !
சென்னை: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருந்து கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தமிழக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றிய கே.ஞானதேசிகன் அந்த பதவியில் இருந்து அண்மையில் மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ)-த்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புதிய தலைமைச் தலைமைச் செயலராக முதல்வரின் முதல் செயலராக இருந்த பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார்
ராம மோகன ராவ் தமிழக அரசின் பல முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல்-அமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்த பி.ராம மோகன ராவ், நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications