ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 3 மாஜி எம்.எல்.ஏக்கள்- கொத்தாக இணைந்த தேமுதிகவினர்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேமுதிக , தமாகாவைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான ராம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதேபோல், திருவாரூர் மாவட்ட தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைச் செயலாளர்களான மோகன்குமார், எம்.ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்களான விஜயகாசி, கொரடாச்சேரி குமார் (எ) வீரக்குமார், வலங்கைமான் ராஜசேகர், முத்துப்பேட்டை முருகேசன், கோட்டூர் முருகானந்தம், மன்னார்குடி கென்னடி, நன்னிலம் மவுனகுரு, நீடாமங்கலம் ரமேஷ், திருவாரூர் நகரச்செயலாளர் செந்தில்குமார், திருத்துறைப்பூண்டி நகரச்செயலாளர் அண்ணாதுரை, மன்னார்குடி நகரப்பொறுப்பாளர் ரமேஷ்.
மேலும், மாவட்ட விஜயகாந்த் மன்றச்செயலாளர் தேவதாஸ், மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் செந்தில் (எ) திருஜோதி செல்வம், மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் நாகவள்ளி. மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, நன்னிலம் பேரூராட்சி செயலாளர் நசரத், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் வெங்கட மணிகண்டன் பொன்னுசாமி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ் உடன் இருந்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications