இந்த பெரிய மனுஷன் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. என்ன கொடுமை இது!
6 வயது சிறுமிக்கு 50 வயது நபர் பாலியல் தொல்லை தந்துள்ளார்.
ஈரோடு: 50 வயசு நபருக்கு 6 வயது குழந்தையை நாசம் செய்ய எப்படி மனசு வரும்? அப்படித்தான் ஈரோட்டில் நடந்திருக்கு. இத்தனைக்கும் இந்த 50 வயது பெரிய மனுஷன் ஒரு முன்னாள் அதிமுக கவுன்சிலராம்!
ஈரோட்டில் லக்காபுரம் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அதிமுக முன்னாள் வார்டு உறுப்பினர். இவர் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கணவன், மனைவி வசித்து வருகிறர்கள். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பக்கத்து வீடு குழந்தையை தங்கராஜ் அடிக்கடி வந்து கொஞ்சிட்டு போவாராம்.

குழந்தைக்காக காத்திருந்தார்
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி மாலை குழந்தையின் பெற்றோர் அவசர காரியமாக வெளியே செல்ல வேண்டி வந்தது. ஸ்கூல்ல இருந்து குழந்தை வருவாள் என்பதால் வீட்டை பூட்டாமல் வெறுமனே சாத்திவிட்டு, உடனே திரும்பி வந்திடலாம் என்று நினைத்து கிளம்பினார்கள். இந்த விஷயம் பக்கத்து வீட்டு தங்கராஜூக்கு தெரிந்துவிட்டது. இதுக்காகவே காத்து கிடந்தவர் போல், ஸ்கூல் விடற டைம் பார்த்து, தெரு முனையிலேயே குழந்தைக்காக காத்து நின்றார்.

வா.. வீட்டுக்கு போகலாம்
எதிர்பார்த்தபடியே சிறுமியும் வந்தாள். அவளிடம், உன் வீட்டில் யாரும் இல்லை, என் வீட்டில் இருக்கும்படி உங்க அம்மா சொல்லிவிட்டு போனார்கள், வா போகலாம்" என்று அவளை கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனிடையே குழந்தையின் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டனர். இவ்வளவு நேரமாகியும் பிள்ளையை காணோமே என்று தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது, சிறுமி யூனிபார்ம் இல்லாமல் வெறும் ஜட்டியுடன் அழுதுகொண்டே ஓடிவந்தாள்.

தங்கராஜ் எஸ்கேப்
இதனை கண்ட பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்தால், சிறுமி தன்னை பாலியல் தொந்தரவு செய்ததை மழலையுடன் சொல்லி கதறினாள். இதையடுத்து, பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த தகவல் தெரிந்ததும் தங்கராஜ் எஸ்கேப்! எங்கு போனார் என்றே தெரியவில்லை. கடந்த 25-ம் தேதி மாயமானவரை பல இடங்களில் தேடியும் போலீசாரிடம் அவர் சிக்கவில்லை.

கம்பி எண்ணும் தங்கராஜ்
அதனால் தங்கராஜின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில், தூத்துக்குடியில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்து. அங்கு விரைந்து சென்ற போலீசார், தங்கராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இப்போது தங்கராஜ் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
