ஒட்டன்சத்திரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ நாச்சிமுத்து காலமானார்
சென்னை: ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாச்சிமுத்து கவுண்டர் இன்று காலை மரணமடைந்தார்.அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக எம்.எல்.ஏ நாச்சிமுத்து கவுண்டர் தனது சொந்த ஊரான தேவத்தூரில் இன்று காலை மறைந்தார்.
இவரது சொந்த ஊர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர். வயது மூப்பின் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தேவத்தூரில் மணிமேகலை இளங்கோ என்ற பள்ளியை நடத்தி வந்தார்.

இவரது மனைவியும் ஏற்கனவே காலமாகி விட்டார். வளர்ப்பு மகன் வள்ளுவன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
நாச்சிமுத்து அரசியல் பயணம்:
நாச்சிமுத்து கடந்த 1962ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.அப்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேனாபதி கவுண்டரிடம் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
1967-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனியப்பனை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1971ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பழனியப்பனை 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தொடர்ந்து 2 முறை ஒட்டன்சத்திரம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications