ஸ்டாலின், தினகரன், கமல்.. ஆர்கே நகர் மக்கள் பிரச்னைகளை இவர்களால்தான் தீர்க்க முடியுமாம்.. சர்வே

ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய சர்வே முடிவுகளில் மக்கள் பிரச்னை தீர்க்கும் தலைவர்களில் ஸ்டாலின், தினகரன், கமல் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரஷரில் வெடிக்கப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியும்.. மாஃபா பாண்டியராஜன் தடாலடி!

    சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்கள் பிரச்னை தீர்க்கும் தலைவர்கள் குறித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவில் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பார் என்று 39.9 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அடுத்தபடியாக தினகரன், கமல்ஹாசன், சீமான், அன்புமணி உள்ளிட்டோருக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

    லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஆர்கே நகர் மக்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு கிடைத்த வாக்குகளை சர்வே முடிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

    ஆர்கே நகரில் மருத்துவவசதி, சாலை வசதி இல்லை, வேலையில்லா திண்டாட்டம், பணப்புழக்கம் இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. குடிநீரில் கழிவு நீர் கலப்பு, மீன்பிடி துறைமுகம் மோசமான நிலையில் உள்ளது உள்ளிட்ட பிரச்னைகளையும் ஆர்கே நகர் மக்கள் எதிர்கொள்கின்றனர்.

    பிரச்னை தீர்க்கும் தலைவர் யார்?

    பிரச்னை தீர்க்கும் தலைவர் யார்?

    இந்நிலையில் ஆர்கே நகர் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் தலைவர்கள் யார் என்று கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் தேர்தலில் எந்த கட்சி பிரச்னை தீர்க்கும் கட்சி, எந்த கட்சியின் தலைவர் மக்களின் பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பார் என்று மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

    அதிமுகவிற்கு மூன்றாவது இடம்

    அதிமுகவிற்கு மூன்றாவது இடம்

    அதற்கு திமுக என்று 39.9 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். அடுத்ததாக டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக 30.15 சதவீதம் பேரும், முதல்வர்- துணை முதல்வர் அணி என்று 21 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஆர்கே நகர் மக்களின் பிரச்னையை தீர்க்கும் என்று 5 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தினகரன் நம்பர் 2

    தினகரன் நம்பர் 2

    ஆர்கே நகர் மக்கள் மனதில் இடம் பிடித்த இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் மத்தியில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் தலைவர்களின் வரிசையையும் கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் இடத்தை மு.க.ஸ்டாலினும் இரண்டாம் இடத்தை டிடிவி. தினகரனும் பிடித்துள்ளனர். ளிக்கப்பட்டுள்ளது.

    கமலை எதிர்பார்க்கும் மக்கள்

    கமலை எதிர்பார்க்கும் மக்கள்

    விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் மீதும் ஆர்கே நகர் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். முதல் 5 தலைவர்கள் வரிசையில் கமலுக்கு 3வது இடத்தை கொடுத்துள்ளனர் மக்கள். இந்த வரிசையில் 4வது இடம் சீமானுக்கும், ஐந்தாவது இடம் அன்புமணிக்கும் கிடைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+