மேயர் அயல் நாட்டிலா வசிக்கிறார்?… சைதை துரைசாமியை போட்டு தாக்கும் மா.சுப்ரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் இருந்து வந்தால் ரிப்பன் மாளிகை - ரிப்பன் மாளிகையில் இருந்து சென்றால் வீடு என்றே கதியாய் கிடக்கும் துரைசாமி, நாட்டு நடப்புக்களை ஒரு சிறிதும் அறியாதவர் என்று இந்நாள் மேயரை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னையில் குடிநீர்ப் பிரச்சனை இல்லை என்று கூறியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

குடிநீர் வாரியம் சிறப்பாகச் செயல்படுவதால் சென்னையில் எந்த இடத்திலும், குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் குடிநீர்ப் பிரச்சினை இல்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கோமாளித்தனமாய் கூறியிருப்பது இன்றைய நாளேடுகளில் செய்தியாக வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சென்னையில் நிலவி வருகின்ற குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும் என்று தி.மு.கழக மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாக ஒரு அதிமேதாவியைப் போல கருத்தை வெளியிட்டிருக்கின்ற சைதை துரைசாமியை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

அயல்நாட்டில் வசிக்கிறாரா?

அயல்நாட்டில் வசிக்கிறாரா?

இவர் சென்னையில்தான் இருக்கின்றாரா? அல்லது ஏதாவது அயல்நாட்டில் இருக்கின்றாரா? என்று தெரியவில்லை. அவரது கோமாளித்தனமான பேச்சினை நாளேட்டில் படித்தபோது அந்த கால சினிமாவில் வரும் காட்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.

மாதம் மும்மாரி

மாதம் மும்மாரி

அரண்மனைக்குள்ளே வாசம் புரிகின்ற மன்னன் தன்னுடைய அமைச்சர்களிடத்திலே கேட்பானே "மாதம் மும்மாரி பொழிகின்றதா?"என்று, அதைப்போல வீட்டில் இருந்து வந்தால் ரிப்பன் மாளிகை - ரிப்பன் மாளிகையில் இருந்து சென்றால் வீடு என்றே கதியாய் கிடக்கும் துரைசாமி, நாட்டு நடப்புக்களை ஒரு சிறிதும் அறியாதவர் என்பதுதான் அவர் நேற்று மன்ற கூட்டத்தில் பேசிய பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

குடிநீர் பிரச்சினை

குடிநீர் பிரச்சினை

சென்னை குடிநீர் வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக சான்றிதழ் கொடுக்கும் சைதை துரைசாமி கடந்த ஆண்டுகளில் தி.மு.க. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மெட்ரோ வாட்டருக்கும், மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதை வசதியாக மறந்திருக்கிறார். தி.மு.க. நிர்வாகத்தில் ஒரு குடம் தண்ணீர்கூட பிடிக்க முடியாமல் மக்கள் அல்லாடியதாகவும், இப்போது நிலைமை அப்படி இல்லை என்றும் கூறுகிறார்.

குடிநீர் திட்டங்கள்

குடிநீர் திட்டங்கள்

தி.மு.க. ஆட்சியில் 2008-09 ஆம் ஆண்டில் 289.88 கோடி ரூபாய் செலவில் 50 நகர்புற திட்டங்கள், நிறைவேற்றப்பட்டன. ஆனால், 2012-13ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 15.71 கோடி ரூபாய் செலவில் 7 நகர்புற குடிநீர் திட்டங்கள்தான் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்பதை திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே தனது அறிக்கையில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சொன்னாரே?

அமைச்சர் சொன்னாரே?

சைதை துரைசாமி சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும். ஆனால் பல்வேறு நாளேடுகளில் குடிநீர் தட்டுப்பாடு பற்றிச் செய்தி வந்தபோது அந்த துறை அமைச்சர் அதிகாரிகளையெல்லாம் உடனடியாக அழைத்துப் பேசி குடிநீர் பற்றாக்குறைப் பற்றி உண்மையை தெரிந்து கொண்டு, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று சொன்னது எதற்காக?.

ஏரிகளில் நீர் இல்லை

ஏரிகளில் நீர் இல்லை

சென்னையில் 2003-ஆம் ஆண்டு நிலவிய குடிநீர் பிரச்சனை இப்போது நிலவுவதாகவும், குடிநீர் வாரியம் இயன்ற அளவிற்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்வதாகவும் சென்னை குடிநீர் வாரியம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது எதற்காக? சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது. இப்போது இருப்பது பத்து சதவீதம்தான் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தது எதற்காக?

காலி குடங்கள்

காலி குடங்கள்

இப்பொழுது ஒருநாள் விட்டு ஒருநாள்தான் பலப்பகுதிகளுக்கு குடிதண்ணீரே வருகிறது. தாய்மார்களும், பள்ளி மாணவிகளும் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலைகின்ற அவலநிலையினை நாளேடுகள் தினம் தினம் படம் எடுத்து காண்பிக்கின்றன.

ஒரு குடம் 6 ரூபாய்

ஒரு குடம் 6 ரூபாய்

அதுவுமில்லாமல் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும், வளசரவாக்கம் பகுதியில் ஒரு குடம் தண்ணீர் 6 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தியாகராய நகர் பகுதியில் சிறிதளவே கிடைக்கும் தொட்டி குடிநீர் தண்ணீர் ஓட்டல்களுக்கு விற்கப்படுவதாகவும் நாளேடுகள் செய்திகளை வெளியிடுகின்றன.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு

சில பகுதிகளில் வரும் தண்ணீரோ சுகாதாரமற்ற முறையில் வருவதாகவும், சுகாதாரமற்ற குடிநீரை விநியோகம் செய்வதால் ராயப்பேட்டை திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நிறைய பேருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புளியந்தோப்பு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதாக நாளேடுகளில் தொடர்செய்திகள் வந்ததையும் அதை படித்துப் பார்த்ததையும் நம்மால் மறக்க இயலவில்லை.

கொளத்தூரில் போராட்டம்

கொளத்தூரில் போராட்டம்

கொளத்தூரில் வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் மூலம் குறைகளைக் கேட்டறிந்த போது அதில் 98ரூ பேர் தாங்கள் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதை மெத்த வேதனையோடு தெரிவித்தபோதுதான், மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் தலைவர் தளபதி அவர்கள் இந்த அரசாங்கத்தின் கையாலாகதனத்தை தட்டிக் கேட்கவும், நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சனையை போக்குவதற்கு எண்ணமில்லாமல் தூங்கிக் கிடக்கும் இந்த அரசாங்கத்தை தட்டி எழுப்பி நீதிகேட்கத்தான் கொளத்தூர் தொகுதியிலே 50,000-க்கும் மேற்பட்ட பொது மக்களை ஒன்று திரட்டி இந்த ஆட்சிக்கு எதிரான தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்கள். தாகத்தைத் தீர்த்து வைக்க தமிழக அரசே தண்ணீரைத் தா? என்று போர் முரசும் எழுப்பினார்கள்.

இருமுறை மேயர்

இருமுறை மேயர்

சென்னை மாநகரின் மேயராக 2 முறை ஸ்டாலின் பணியாற்றியபோது குடிசைமாற்று வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தீயணைப்புத் துறை, நூலகத் துறை போன்ற துறைகளை சென்னை மாநகராட்சியோடு ஒருங்கிணைத்து, ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். ஆனால், சைதை துரைசாமி பொறுப்புக்கு வந்த பின்னர், எந்த சேவைத் துறையையும் மாநகராட்சியுடன் இணக்கமான இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளாமல் காலங்கடத்தி வருவதை அனைவரும் நன்றாக அறிவார்கள்.

தண்ணீர் பற்றாக்குறை

தண்ணீர் பற்றாக்குறை

சென்னையைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 83 கோடியே 4 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் தேவை. ஆனால் இப்போது வழங்கப்படுவதோ 62 கோடி லிட்டர் மட்டும்தான். இந்தக் கணக்கைப் பார்த்தாலே 21 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியும். நிலைமை இப்படி இருக்க, மேயர் துரைசாமியோ குடிநீர் வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்.

திமுகவினரின் மனைவிகளா?

திமுகவினரின் மனைவிகளா?

அதுவுமின்றி சைதை துரைசாமி, கொளத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினரின் மனைவிமார்கள் கலந்து கொண்டதாகவும், இதை வீடியோ ஆதாரமுடன் நிரூபிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தி.மு.க.காரர்களின் மனைவிமார்கள் என்ன தீவிரவாதிகளா? அவர்களை படம் பிடித்து, வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்க? அவர்கள் குடிப்பதும் தண்ணீர்தானே! அவர்களும் கொளத்தூர் தொகுதியில் வசிப்பவர்கள்தானே!

தண்ணீர் தேவைப்படதா?

தண்ணீர் தேவைப்படதா?

கொளத்தூரில் தண்ணீர் பிரச்சனை என்கிற போது தி.மு.க.காரர்களின் மனைவிமார்களை அது பாதிக்காதா? தண்ணீர் பிரச்சனை என்று ரோட்டிற்கு வந்தால் அது துரைசாமியின் பார்வைக்கு தவறா? அப்படியே ஒரு வேளை தி.மு.க.வினரின் மனைவிமார்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்றால் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வருகிறபோது மனைவிமக்களோடு நடுத் தெருவுக்கு வந்து போராடுபவன்தான் தி.மு.க.காரன். இதை சொல்லிக் கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எங்குமே தண்ணீர் வரவில்லை

எங்குமே தண்ணீர் வரவில்லை

எங்கெங்கு தண்ணீர் வரவில்லை, எங்கு தண்ணீர் சப்ளை முறையாக இல்லை, எங்கெல்லாம் குடிநீரில் கழிவுநீர் கலக்கின்றது, அதையெல்லாம் போட்டோ பிடித்து வீடியோ பதிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துரைசாமி! தி.மு.க. மனைவிமார்கள் கலந்து கொண்டார்கள், அதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று சொல்வது வெட்ககேடாக இருக்கிறது.

குடிநீர் திருட்டு

குடிநீர் திருட்டு

சென்னையில் குடிநீர் திருட்டைத் தடுக்க 30 நீரேற்று நிலையங்களில் தானியங்கி முறை அமுல்படுத்தப்படும் என்கின்ற செய்தி அனைத்து நாளேடுகளிலும் மிகப் பெரிய அளவில் வெளியாகி இருந்தது. அதற்காக கோடிக்கணக்கான ரூபாயும் செலவு செய்யப்பட்டது. ஆனால் கலைஞர் நகர் (விருகம்பாக்கம்) நீரேற்று நிலையத்தை தவிர 29 நீரேற்று நிலையங்களிலும் தானியங்கி இயந்திரங்களை வேலை செய்யவிடாமல் அவற்றின் ‘ஒயர்களை' துண்டித்து சேதப்படுத்திய செயலை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் செய்துள்ளதை மறுக்கமுடியுமா?

அதிமேதாவித்தனமாக பேசுவதா?

அதிமேதாவித்தனமாக பேசுவதா?

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளியில் தெரியவிடாமல் தடுப்பதற்காகவே இத்தகைய கீழ்த்தரமான வேலையை அந்தத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் துணைகொண்டு செய்திருப்பதை மறுக்க முடியுமா? இனியாவது, மேயர் சைதை துரைசாமி உண்மை நிலையை அறிந்துகொண்டு பேசினால் நல்லது. தான் ஒரு அதிமேதாவி போல காட்டிக்கொள்ள வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது, கோமாளித்தனமாக நடந்துகொள்வது என்பது ஒரு உயர்ந்த பொறுப்பிலே இருப்பவர்க்கு அழகல்ல! என்று சாடியுள்ளார் முன்னாள் மேயர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+