முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி.. நில அபகரிப்பு வழக்கில் கோர்ட் உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கினார். அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.

டிஸ்சார்ஜ்
நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையைிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காயமடைந்ததாக கூறப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிபந்தனை ஜாமின்
இதனையடுத்து, கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸில் இரு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கு
இந்நிலையில் தற்போது முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் மீது அண்மையில் நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, திமுக பிரமுகரை தாக்கியது ஆகிய வழக்குகளில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மூன்றாவதாக நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

3வது வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்நிலையில் அந்த இரண்டு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அவர் சிறையிலில் இருக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. ரூ. 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications