மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்... ஹைகோர்ட் உத்தரவு!
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை : டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவும் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி கடந்த 2011- 2015 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது 16 பேரிடம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.95 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சகாயராஜ், பிரபு உள்ளிட்ட 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது அக்டோபர் 3ம் தேதி வரை செந்தில்பாலாஜியை கைது செய்யமாட்டோம் என்று உறுதியளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செந்தில்பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications