Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலைக்குள் ரூ. 1.25 லட்சம் பணத்தை வைத்திருந்த மாஜி எம்.பி. - திருடர்களிடமிருந்து தப்பியது

Subscribe to Oneindia Tamil

நாசரேத்: திருச்செந்தூர் தொகுதி முன்னாள் திமுக எம்.பி. ஏடிகே ஜெயசீலன் வீட்டில் நடந்த திருட்டின்போது சேலைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பணம் மட்டும் திருடர்களிடமிருந்து தப்பியுள்ளதாம்.

நாசரேத் இண்டாவது ஐசக் தெருவை சேர்ந்தவர் ஏடிகே ஜெயசீலன். திருச்செந்தூர் தொகுதி முன்னாள் எம்பியான இவர் சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை சென்றார்.

கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் கதவை உடைத்து இவரது வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொளளைடித்து சென்றனர். இதுகுறித்து சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜகோபால், நாசரேத் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், எஸ்ஐ சுகுமார் விசாரணை நடத்தினர். திருடர்கள் கதவை உடைக்க பயன்படுத்திய கார் டயர் கழற்றும் கம்பி இரண்டை அங்குள்ள ஓடையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

திருட்டு குறித்து ஜெயசீலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று ஊர் திரும்பினார். இதில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போனதாக தெரிவித்தார்.

அதேசமயம், பீரோவில் சேலைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் திருடர்கள் கண்ணில் படாமல் தப்பியது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+