Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வழியாக அதிமுகவில் முறைப்படி இணைந்தார் மாஜி டிஜிபி ஆர். நடராஜ்

Subscribe to Oneindia Tamil

Former TN DGP Nataraj joins ADMK
சென்னை: அதிமுக அனுதாபியாக பார்க்கப்பட்டு வந்தவரான முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ், இன்று முறைப்படி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து நடராஜ் அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி கட்சிக்குள் அவரை வரவேற்றார்.

1975ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி நடராஜ். சென்னை நகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர். கடைசியாக சிறைத்துறை, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்தார்.

சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியைப் பெறுவதற்காக அவர் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார்.

நேர்மையான அதிகாரி என்று பொதுவாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அனுதாபி என்றும் பார்க்கப்பட்டவர் நடராஜ். அதிமுக ஆட்சியில் இவர் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

காவல்துறைப் பணி தவிர இலக்கியம், கர்நாடக இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல ஆர்வமும், புலமையும் மிக்கவர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் உறவினரும் கூட.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+