செங்கோட்டை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது
நெல்லை: செங்கோட்டை கற்குடியில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி கிராமத்தை சேர்ந்தவர் முப்புலி மகன் கருப்பசாமி ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 10.09.2015 ஆம் ஆண்டு தனது ஆட்டோவில் 5 பேரை ஏற்றிக் கொண்டு புளியரையை நோக்கி சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

கருப்பசாமி,அடிவெட்டி,மகேஷ்,முருகன்,இசக்கி 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடினார். இந்த வழக்கில் கற்குடியை சார்ந்த வடகாசி மகன் ஹரிஹரன் என்பவர் புளியரை போலீசில் புகார் வாக்குமூலம் கொடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக புளியரை போலீசார் விசாரணை நடத்தியதில், லாரியை ஓட்டி வந்தவர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், லாரியை மோதவிட்டு ஆட்டோவில் வந்தவர்களை கொலை செய்தது தெரியவந்தது.இந்த வழக்கில் 12பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் ஹரிஹரன் புகார் வாக்கு மூலம் கொடுத்ததால் அவரை கொலை செய்ய எதிரிகள் முடிவு செய்துள்ளனர். ஞாயிறன்று நள்ளிரவு 12மணியளவில் ஹரிஹரன் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டு முன்பு 6பேர் கொண்ட குமபல் வந்துள்ளது 3பேர் மட்டும் அவரது வீட்டுக்குள் நுழைந்து ஹரிஹரனை 3பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டி படு கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டது. அனைவரும் சட்டை அணியாமல் வந்து கொலையில் ஈடுபட்டதாக கொலையை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை செங்கோட்டை வனத்துறை அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தது. அப்போது கொலையாளிகள் ள் கேரளாவுக்கு தப்பி செல்ல ஹரிஹரா ஆற்று பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதில் உதயகுமார், மகேஷ், நவாஸ்கான், காசி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் கேரளாவில் யானைகளை கொன்று தந்தங்களை கொள்ளையடித்ததும், சந்தன மரங்களை வெட்டி கடத்தியதும் தெரியவந்ததைத் தொடர்ந்து கேரளா வனத்துறையினர் செங்கோட்டையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications