குறைந்த விலையில் பிளாட்- கோடிக்கணக்கில் மோசடி: கணவன்–மனைவி உள்பட நால்வர் கைது
சென்னை: குறைந்த விலையில் பிளாட் வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த ஜார்ஜ் எட்வின் நண்பராக அறிமுகமானார். அவர் தனக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் குறைந்த விலையில் பிளாட்டுகள் வாங்கலாம் என்று தெரிவித்தார்.
இதனை நம்பிய வெங்கடேசன் ரூ.10 லட்சத்தை ஜார்ஜ் எட்வினிடம் கொடுத்தார். இதற்கு ஜார்ஜ் எட்வினின் மனைவி மகேஸ்வரி, மகள்கள் பிரீத்தி பிரைட், நான்சிபிரியா மற்றும் உறவினர் எட்வர்ட் ஆகியோர் துணையாக பேசினர்.
இந்த நிலையில் ஜார்ஜ் எட்வின் குறிப்பிட்டபடி பிளாட் வாங்கி கொடுக்கவில்லை. அவர் ஏமாற்றியது தெரிந்தது. இதுகுறித்து வெங்கடேசன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் செய்தார். கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது ஜார்ஜ்எட்வின், அவரது மனைவி மகேஸ்வரி உள்பட 5 பேரும் சேர்ந்து வீட்டு வாரிய குடியிருப்பில் பிளாட் வாங்கி கொடுப்பதாக வெங்கடேசனிடம் பணம் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து ஜார்ஜ் எட்வின், அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பிரீத்தி பிரைட், நான்சிபிரியா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் ஏராளமானோரிடம் பலகோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கால்நடை மருத்துவர் மணிவேலிடம் சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரியத்தில் பிளாட் வாங்கி தருவதாக ரூ.9 லட்சமும், அதே இடத்தில் 5 பிளாட்டுகள் வாங்கி கொடுப்பதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தங்கவேலிடம் ரூ.40 லட்சமும் மோசடியாக பணம் பெற்றுள்ளனர்.மேலும் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக மாணிக்கம் என்பவரிடம் ரூ.2 லட்சம் பெற்றுள்ளதும் தெரிந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications