முதல்வரின் கான்வாய் வாகனங்களுடன் கலந்து வீடு வரை ஃபாலோ செய்த 4 பேர்.. கைது.. பரபரப்பு!

சென்னையில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுடன் கலந்து அவரை 4 பேர் வீடு வரை ஃபாலோ செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுடன் கலந்து அவரை 4 பேர் வீடு வரை ஃபாலோ செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நலிவடைந்ததை அடுத்து தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்தடைந்தார்.

இன்று காலை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நலம் விசாரித்த முதல்வர்

நலம் விசாரித்த முதல்வர்

இதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்.

முதல்வரை பின்தொடர்ந்த 4 பேர்

முதல்வரை பின்தொடர்ந்த 4 பேர்

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பின்தொடர்ந்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுடன் கலந்து நான்கு பேர் முதல்வரை ஃபாலோ செய்துள்ளனர்.

முதல்வர் வீடு வரை

முதல்வர் வீடு வரை

முதல்வரின் வீடு வரை ஃபாலோ செய்த அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரும் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் என தெரியவந்துள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

அவர்கள் எதற்காக முதல்வரை பின்தொடர்ந்தனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் சென்னையில் முதல்வர் வாகனத்தை 4 பேர் பின்தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+