10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுவையில் 4 பேர் முதலிடம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில், 498 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அம்மாணவர்களின் பெயர் விபரமாவது:
எஸ்.பிரிதா, அலோர்பவம் மேல்நிலை பள்ளி, ஜூடி மெக்கலின் குளோனி மேல்நிலை பள்ளி, வைஷ்ணவி தேவி குளோனி மேல்நிலை பள்ளி, இவர்கள் மூவரும் பிரெஞ்சு மொழிப்பாடம் எடுத்து படித்தவர்கள்.
தமிழ் மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் திருக்கண்ணுர், சுப்பிரமணிய பாரதி மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதேபோல், 497 மதிப்பெண்கள் பெற்று 18 மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் 496 மதிப்பெண்களுடன் 13 மாணவர்கள் உள்ளனர்.
பிரெஞ்சு பாடத்தில் 72 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்வு முடிவுகளை கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications