நெல்லையில் நவம்பர் 10 முதல் குரூப் 4 க்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
நெல்லை: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 நிலைகளில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், நில அளவையார், வரைவாளர் பணியிடங்களுக்கு தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடக்கிறது.
இந்த தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அனுபவமுள்ள பயிற்றுனர்களால் வரும் நவ 10 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நேரிலோ, அஞ்சல் வழியிலோ உடனே தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தில் இனம், பிறந்த தேதி, கல்வி தகுதி, முழுமையான அஞ்சல் முகவரி, கைபேசி எண், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட பதிவு எண், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான அடையாள அட்டையின் நகல் ஆகியவை இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற பல்வேறு இடங்களிலும் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications