கொசுவத்தி தீப்பொறியில் சிக்கி லாரி எரிந்து.... இலவச மின்விசிறிகள் சாம்பல்!
Subscribe to Oneindia Tamil
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தமிழக அரசின் விலையில்லா மின்விசிறிகள் வைக்கப்பட்டிருந்த லாரி தீப்பிடித்து அதில் இருந்த அனைத்து மின் விசிறிகளும் எரிந்து சாம்பலாகி விட்டது.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து வந்த அந்த லாரி அரசு சிப்காட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு லாரி ஓட்டுநர்கள் கொசுவத்தி ஏற்றி வைத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிலிருந்த தீப்பொறி பட்டு லாரியில் தீப்பிடித்துக் கொண்டது. டிரைவர்கள் அலறியடித்து இறங்கி ஓடினர்.
தீப்பிடித்து எரிந்து முழுமையாக பொசுங்கி சாம்பலாகிப் போனது. இதில் விலையில்லா மின்விசிறிகளும் எரிந்து நாசமாகிப் போயின. இதுகுறித்து சிப்காட் வளாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications