அரசியல்வாதிகளுக்காக காத்திருப்பதால் திருடு போகும் இலவச லேப்டாப்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: அரசியல்வாதிகள் வந்து வழங்க வேண்டும் என்பதற்காக ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் அரசின் இலவச லேப்டாப்கள் திருடப்பட்டு வருவதாக சிவகங்கை பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் ள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த லேப்டாப்கள் திருடு போன சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ மாணவர்கள் 266 பேருக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டு பள்ளியின் கம்ப்யூட்டர் அறையில் வைக்கப்பட்டிருந்தது. தொகுதி எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் லேப்டாப்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு கம்ப்யூட்டர் அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உளளே இருந்த லேப்டாப்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை பள்ளி திறக்கப்பட்டு கம்ப்யூட்டர் அறையில் சென்று பார்த்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு தலைமையாசிரியர் சாகுல் ஹமீது திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் எஸ்ஐ ராஜேந்திரபிரசாத் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. பள்ளியில் இருந்து சாலை வரை சென்ற லைக்கா அதன்பின் நகரவில்லை. எனவே மர்மநபர்கள் வாகனங்களில் லேப்டாப்களை கொண்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

Free laptops looted in Tiruppuvam

இதுகுறித்து வழக்கறிஞர் மலையேந்திரன் என்பவர் கூறுகையில் லேப்டாப்களை அரசியல்வாதிகள் வைத்து கொடுக்க வேண்டும் என காலதாமதப்டுத்துகின்றனர். ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் பள்ளிகளில் லேப்டாப்கள் திருடுபோகின்றன. எனவே லேப்டாப்களை தலைமையாசிரியரே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+