கிரானைட் கொள்ளை கும்பலால் அழிந்த விவசாய நிலங்கள், ஏமாற்றப்பட்ட விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கிரானைட் குவாரிகளால் மதுரை மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள், வரத்து கால்வாய்கள் சேதமடைந்து விட்டதாகவும், கழிவுகளை கொட்டி நீர் ஆதாரங்களை மூடியதால் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதாக சட்ட ஆணையர் சகாயத்திடம் பாதிக்கப்பட்டோர் குமுறியுள்ளனர். நிலத்தை பெற்றுக்கொண்டு அதற்கு உரிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

கிரானைட் குவாரி முதலைகள் ஏழை விவசாயிகளிடம் இருந்து ஏமாற்றி பிடுங்கிய நிலங்களை மீட்டு தருவதும் கூட இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு நிகரானது என்று மதுரையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வர்ணித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சகாயம் மதுரையில் புதன்கிழமையன்று விசாரணையை துவக்கினார். வியாழக்கிழமையன்று பாதிக்கப்பட்டோரிடம் மனுக்களை பெற்றார். பல்வேறு பகுதி விவசாயிகள் காத்திருந்து அவரிடம் மனு அளித்தனர்.

Freedom fighter Mayandi Bharathi met Sagayam in Madurai

மனு கொடுத்த சிலர் விவசாயம் அழிந்து வறுமையில் வாடுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். சகாயம் நேற்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணிவரையிலும், பின்னர் மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணிவரையிலும் நேரில்60 மனுக்களையும் தபால் மூலம் 11 மனுக்களை சகாயம் பெற்றார். உயர்நீதிமன்றத்தில் இதனை தெரிவித்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சகாயம் தெரிவித்துள்ளார்.

தியாகிகள் சந்திப்பு

சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி நிர்வாகிகள் 94 வயதான தியாகி மாயாண்டிபாரதி, பெரியசாமி, முத்துப்பாண்டி மற்றும் பலர் சகாயத்தை சந்தித்து வாழ்த்து கூறினர். தொடர்ந்து அவரிடம் பேசிய மாயாண்டி பாராதி, இந்தியாவில் எல்லா வளமும் இருக்கிறது. ஆனால் சிலரது சுயநலத்தாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் வளங்கள் சுரண்டப்படுகின்றன என்றார். இதனால் ஒரு தரப்பினரிடம் சொத்து குவிந்து கிடக்கிறது. மற்றொரு தரப்பினர் வறுமையில் வாடுகின்றனர். இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களிடம் வழங்கும் பணியை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்றுள்ளீர்கள். எனவே இதுவும் ஒரு சுதந்திர போராட்டம் தான். நீங்கள் விசாரணை நடத்துவதால், பணம் குவித்தவர்களால் ஆபத்து ஏற்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள் என்றார். அதற்கு சகாயம், நீங்கள் செய்ததை விட நான் ஒன்றும் செய்யவில்லை. என்னால் முடிந்த சிறு சிறு காரியங்களை செய்கிறேன் என்று கூறினார்.

விவசாயிகள் குமுறல்

கீழையூர் அருகே ரங்கசாமிபுரத்தில் இருந்த மூன்றரை ஏக்கர் புன்செய், ஒன்றரை ஏக்கர் நன்செய் நிலங்களை கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மிரட்டி வாங்கியதாக அமராவதி என்ற முதிய பெண்மணி கண்ணீர் மல்க கூறினார். அதிலிருந்த வீட்டை என் அனுமதியின்றி உடைத்து சேதப்படுத்தி பொருட்களை அபகரித்தனர். போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்றும் சகாயத்திடம் குமுறினார்.

பணம் கொடுக்காமல் மிரட்டல்

திருவாதவூரில் எனக்கும், உறவினர்களுக்கும் சொந்தமாக 12 ஏக்கர் 76 சென்ட் நிலம் இருந்தது. அதை கிரானைட் நிறுவனத்தினர் ரூ.24 லட்சத்திற்கு கிரையம் பேசினார். ரூ.6 லட்சத்தை கொடுத்து 2000ல் கிரையம் செய்தனர். இதுவரை மீதம் ரூ.18 லட்சத்தை வழங்கவில்லை கேட்டால் மிரட்டுகின்றனர் என்று திருவாதவூரைச் சேர்ந்த 69 வயதான செல்லத்துரை என்பவர் தெரிவித்தார்.

பொய்த்துப்போன விவசாயம்

பெரியாறு கால்வாய் 26வது மடையிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும். எனக்கு ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் இருந்தது. ஆனால் கிரானைட் குவாரிகள் வரத்து கால்வாய்களை சீரழித்து விட்டன. இதனால் தண்ணீர் வருவதில்லை. ஒரு ஆண்டுக்கு 60 மூடை நெல் கிடைக்கும். 14 ஆண்டுகளாக விவசாயமின்றி கஷ்டப்படுகிறோம் என்றார் ஒரு விவசாயி.

மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்களை கிரானைட் கற்களை போட்டு மூடி விட்டனர். விவசாயம் செய்ய முடியவில்லை என்பது விவசாயிகளின் புகாராகும்.

மூடப்பட்ட ஊரணி

மேலூர் ஆட்டுக்குளத்தில் என் முன்னோர் ஊரணிக்கு இடம் கொடுத்தனர். பல கோடி மதிப்புள்ள அந்த ஊரணியையும், அதை சுற்றியுள்ள இடங்களையும் குவாரி உரிமையாளர்கள் அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்று புகார் அளித்தார் ராம்மூர்த்தி.

பஞ்சமி நிலங்கள் அபகரிப்பு

மேலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பஞ்சமி நிலங்கள் இருந்தன. அதை பி.ஆர்.பி.,நிறுவனத்தினர் அடிமாட்டு விலைக்கு வாங்கி குவாரி நடத்தினர். திருவாதவூர், கீழையூர், தெற்குத்தெரு போன்ற இடங்களில் பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டு விட்டன. இந்த நிலங்களை மீட்டு கொடுக்க வேண்டும் என்று மனு அளித்தார் செல்லப்பாண்டியன்.

போலீசாரின் நிலை

திருமோகூர் அருகே மீனாட்சிநகரில் 27 ஏக்கரில் 376 பிளாட்களை போலீசார் விலைக்கு வாங்கி வீடுகளை கட்ட துவங்கினர். ஆனால் பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தினர், பிளாட்களை கிரையம் எழுதி வாங்கி கொண்டனர் என்பது ஓய்வு பெற்ற போலீசாரின் புகாராகும். எனினும் 4 போலீசார் மட்டும் அங்கு வீடுகளை கட்டினர். இதில் குவாரிகளில் வைக்கப்பட்ட வெடிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரர் இறந்தே போனார். என்னை மிரட்டி ஒரு பிளாட்டை எழுதி வாங்கி விட்டனர். மற்றொரு பிளாட்டையும் எழுதி கொடுக்கும்படி மிரட்டுகின்றனர் என்று புகார் அளித்துள்ளார் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சேவியர்.

10 போலீசார் பாதுகாப்பு

சகாயம் மனுக்களை பெற்ற போது மேலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தை சேர்ந்த சிலர் தங்களை கண்காணிப்பதாக,' சகாயத்திடம் புகார் தெரிவித்தனர். திருமோகூர், புதுதாமரைப்பட்டியை சேர்ந்த சிலரது பெயர்களையும் குறிப்பிட்டனர். இதுகுறித்து சகாயம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து விசாரணை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பீதியில் கொள்ளையர்கள்

பொது மக்களிடம் பெற்ற மனுக்கள் அடிப்படையில் மாவட்ட அதிகாரிகளை சகாயம் இன்றும் விசாரிக்கிறார். கிரானைட் குவாரிகளை அவர் பார்வையிடலாம் என விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இன்றும் சகாயத்திடம் மனுக்களை அளிக்க பொதுமக்கள் காத்துக்கொண்டுள்ளனர். கிரானைட் முறைகேடு தொடர்பான புகார்கள் குவிவதால் கிரானைட் கொள்ளையர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+