நாங்குநேரி மாணவன் சின்னதுரையை தாக்கிய 2 பேர் கைது.. ஏற்கனவே வழிப்பறி கேஸ் இருக்காம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாதி ரீதியாக தாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை மீண்டும் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை ஜாதி ரீதியான தாக்குதல் என்பதை மறுத்த நிலையில், சின்னத்துரையை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாணவன் சின்னதுரை கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாதிய பாகுபாட்டில் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானார். அந்த தாக்குதலில் இருந்து மீண்டு வந்து 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மாணவன் சின்னதுரையை பாராட்டியிருந்தனர்.

சின்னதுரை மீது தாக்குதல்
இந்நிலையில், அண்மையில் போலீசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. அதில் மாணவன் சின்னதுரை மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் காயம்பட்ட மாணவன் சின்னதுரையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காயடைந்த மாணவன் சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நெல்லை மாநகர துணை ஆணையாளர் சாந்தா ராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டனர். சின்னதுரைக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை. கையில் மட்டும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விளக்கம்
இதையடுத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில்,"சின்னத்துரை தற்போது திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இரவு சுமார் 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் தொலைபேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்ட சின்னதுரை, மாவட்ட அறிவியல் மையம் அருகில் உள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னதுரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகில் உள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடம் இருந்த மொபைலை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் பழக்கம்
மேலும், சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் யூசர் நேம், பாஸ்வேர்டு கேட்டபோது, தனக்கு மறந்துவிட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்டபோது அதுவும் தனக்கு மறந்துவிட்டதாக கூறுகிறார். சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். எனத் தெரிவிக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மாணவன் சினத்துரையை தாக்கியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தேடுதல் வேட்டையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான இருவர் மீதும் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications