விடாத பேய் மழையில் மீண்டும் மூழ்கிய சென்னை....படங்களை "சுடசுட" போட்டு மிரளவைத்த 'ட்விட்டர்'வாசிகள்!
சென்னை: சென்னை பெருநகரம் இன்று பெரும் பேய்மழையில் சிக்கியிருக்கிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த அடைமழைக்கு மத்தியில் அலுவலகங்களுக்கு பயணித்த ட்விட்டர்வாசிகள் மழையின் தாண்டவத்தை சுடசுட படம்பிடித்து ட்விட்டர் பக்கங்களில் போட்டு 'வரலாற்றுக் கடமை'யாற்றி வருகின்றனர்.
சென்னை வரலாறு காணாத பயங்கர மழையை கடந்த ஒரு மாத காலமாக எதிர்கொண்டு வருகிறது. இதுவரை பெய்த மழையால் சென்னை பெரும் பிரளயத்தை சந்தித்து வருகிறது.
இதுவும்போதாதென தற்போது பேய்மழை கொட்டி வருகிறது. இடைவிடாத பேய் மழை தற்போதும் நீடித்து வருவதால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் இருந்து அவ்வளவு எளிதில் மீண்டுவிடாது என்றே தெரிகிறது. இந்த மழையின் அட்டகாசத்தை அப்படியே படம் பிடித்து ட்விட்டர் பக்கங்களில் போட்டுள்ளனர் சென்னைவாசிகள்.. சென்னையில் விபரீத நிலைமையை விவரிக்கும் அந்த பதிவுகளில் சில...
|
கேளம்பாக்கம்
வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் கடலலைப் போய் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ பதிவு:
|
தி.நகர்
சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலைக்குள் கடல் நுழைந்துவிட்டதோ?
|
இந்திரா நகர்
சென்னை டைடல் பார்க் செல்லும் வழியில் இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையம் அருகேதான் இந்த கும்மிருட்டு வானமும் மழைவெள்ள காட்சியும்...
|
தரமணி சாலை
இந்திரா நகரைக் கடந்து வேளச்சேரி- எஸ். ஆர்பி ஸ்டூல்ஸ் (தரமணிசாலையில்) எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் வெளுத்தெடுக்கும் மழை
|
மீண்டும் நிறைந்த பெரும்பாக்கம்
சோழிங்கநல்லூர் பகுதியில் ஐ.டி. நிறுவனங்கள் அனைத்தையும் மூழ்கடிக்க காத்திருக்கும் பெரும்பாக்கம் ஏரி.. இந்த ஏரி கடந்த முறை நிரம்பியதால் சோழிங்கநல்லூர்- தாம்பரம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும் ஏரி நிறைந்து கடல்போல காட்சியளிக்கிறது.
|
சிறுசேரி
சிறுசேரி சிப்காட் வளாகம், நாவலூர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன... வானம் எப்படி பொத்துகிட்டு ஊத்துதுசாமி...
|
மேடவாக்கம்
சாதாரண மழைக்கே மேடவாக்கம் தத்தளிக்கும்.. இன்றைய பேய்மழையின் தாண்டவத்தில் சிக்கிய மேடவாக்கம் இது...
|
கீழக்கட்டளை...
வாகனங்கள் அனைத்தும் நீச்சலடித்தபடியேதான் பயணிக்க வேண்டும்.... கீழக்கட்டளை காட்சி
|
குரோம்பேட்டை...
பெருமழைவெள்ளம் தேங்கியிருப்பதால் குரோம்பேட்டையில் நத்தையாய் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
|
நீரில் மூழ்கிய நீர் ஆதாரத்துறை
சென்னை தரமணியில் உள்ள தமிழக அரசின் நீர் ஆதாரத் துறை மற்றும் நீர் ஆய்வு நிறுவனம் மழைவெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications