சத்தமின்றி சிலிக்கான் புரட்சி.. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த.. தமிழ்நாட்டின் குட்டி மாவட்டம்
தென்காசி: குற்றால அருவியும், பசுமையான நெல்வயல்களுமே தென்காசியின் அடையாளமாக இருந்து வந்தன. ஆனால், இன்று அந்த இமேஜ் மாறி வருகிறது. விவசாயத்திற்கும் சுற்றுலாவிற்கும் பெயர்பெற்ற இந்த ஊர், இப்போது உலகத்தரம் வாய்ந்த 'செமிகண்டக்டர்' (Semiconductor) சிப் வடிவமைப்பின் மையமாக உருவெடுத்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்காசியில் விவசாயம் தவிர எதுவும் வாய்ப்பு இல்லை என்றே பலருக்கும் தோன்றி இருக்கும். ஆனால், இன்று அது மாறி உள்ளது. அமெரிக்காவில் உள்ள இன்டெல் (Intel) நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்தன் அய்யாசாமி, தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான தென்காசியிலேயே "தென்காசி செமிகண்டக்டர்ஸ்" என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஏன் தென்காசி? சிப் வடிவமைப்பில் என்ன விசேஷம்?
பொதுவாக செமிகண்டக்டர் துறையில் இரண்டு முக்கியமான வேலைகள் உள்ளன. ஒன்று சிப்களைத் தயாரிப்பது (Fabrication), மற்றொன்று அவற்றை வடிவமைப்பது (Design). சிப்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்கப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.
அதனால், தென்காசி இப்போது 'சிப் டிசைன்' துறையில் கவனம் செலுத்துகிறது. அதாவது, ஒரு சிப் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதற்கான டிஜிட்டல் வரைபடத்தை (Blueprint) உருவாக்குவதுதான் இந்த வேலை. இங்கு உருவாக்கப்படும் டிசைன்களைக் கொண்டு, குஜராத்தில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ சிப்களைத் தயாரித்துக் கொள்ள முடியும். இதற்குப் பெரிய தொழிற்சாலைகள் தேவையில்லை; திறமையான பொறியாளர்களும், நவீனத் தொழில்நுட்ப அறிவுமே போதும்.
ஸ்ரீதர் வேம்புவின் 'ஜோஹோ' போட்ட விதை
தென்காசியில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட முக்கியக் காரணம், ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. பத்து ஆண்டுகளுக்கு முன்பே, "கிராமப்புறங்களிலும் உலகத்தரம் வாய்ந்த டெக் நிறுவனங்களை உருவாக்க முடியும்" என்று அவர் நிரூபித்துக் காட்டினார். அங்கே ஐடி நிறுவனத்தை தொடங்கினார்.
2011-ல் மத்தளம்பாறை என்ற கிராமத்தில் வெறும் 6 ஊழியர்களுடன் அவர் தென்காசியில் தொடங்கிய அலுவலகம், இன்று 1,200-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பெரிய மையமாக வளர்ந்துள்ளது. பெரிய நகரங்களுக்குச் சென்றால்தான் ஐடி வேலை கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, கிராமத்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைத் திறமையாளர்களாக மாற்றியது ஜோஹோ. அந்த நம்பிக்கையில்தான், இன்று செமிகண்டக்டர் போன்ற சவாலான துறைகளும் தென்காசியைத் தேடி வரத் தொடங்கியுள்ளன.
இன்று ஜோஹோ நிறுவனம் தென்காசி பகுதியில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பளித்துள்ளது. இந்த வலுவான அடித்தளமே, ஆனந்தன் அய்யாசாமி போன்றவர்கள் செமிகண்டக்டர் போன்ற சவாலான துறையைத் தென்காசியில் தொடங்கத் துணிவைத் தந்துள்ளது.
எதிர்காலத் தென்காசி
வெறும் கிராமமாக இருந்த தென்காசி தற்போது உலகத்தரம் வாய்ந்த நகரங்களுக்கு போட்டியாக மாறி உள்ளது. பெரிய மென்பொருள் நிறுவனங்கள் சென்னை அல்லது பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலையைத் தகர்த்தெறிந்தார் வேம்பு. பெருநகரங்களைத் தேடி ஓடாமல், கிராமப்புற மாணவர்களிடம் உள்ள திறமையைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்.
பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றிய பல வல்லுநர்கள் இப்போது தென்காசியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இது வெறும் வேலைவாய்ப்பு மாற்றம் மட்டுமல்ல; ஒரு கால கட்டத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த ஒரு ஊர், இப்போது இந்தியாவின் 'டிஜிட்டல்' வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது.
நெல் விளையும் பூமியில் இப்போது 'சிலிக்கான் சிப்'களுக்கான தொழிற் மையங்கள் வளரத் தொடங்கியுள்ளது. இது தமிழகத்தின் மற்ற சிறிய நகரங்களுக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications