For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லட்சுமணர் சிலை திருட்டு!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள லட்சுமணர் சிலை திருட்டுப் போய் உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான லட்சுமணர் சிலை திருட்டு போயுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்வர். காசிக்குச் சென்றாலும், ராமேஸ்வரத்தில் புனித நீராடுவதுதான் முழுமையடைந்த ஆன்மீக பயணம் என்ற நம்பிக்கை இருப்பதால் இங்கு எப்போதும் பக்தர் கூட்டம் நிரம்பி வழியும்.

 From Ramershwaram temple lakshman idol looted

இந்நிலையில் கோவிலில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள லட்சுமணர் சிலை திருட்டுப் போயுள்ளது. இக்கோவிலில் இருக்கும் பொருட்களையும் சொத்துக்களையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள்.

அவ்வாறு ஆய்வு செய்யும் போது லட்சுமணர் சிலை திருட்டுப் போனது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருட்டு போன லட்சுமணர் சிலை தொடர்பாக விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஐ.பொன். மாணிக்க வேல் கூறியுள்ளார்.

English summary
In Rameshwaram Ramanatha swamy temple laksman idol was looted and police said asap inquiry will be started
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X