ஊட்டிக்கு போற பிளானா? நாளை முதல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஊட்டி: ஊட்டியை அடுத்த தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
ஃபாஸ்ட் டேக் சோதனையை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை முதல் 7 நாட்களுக்கு தொட்டபெட்டா செல்ல அனுமதி இல்லை.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். அது மட்டுமல்லாமல் புதிதாக திருமணமான தம்பதிகளும் ஹனிமூனுக்கு வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இங்கு கடந்த 10 ஆம் தேதி முதல் தாவரவியல் பூங்காவில் 126 ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு உதகை மலை ரயில் உள்ளிட்ட மலர் அலங்காரங்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
மேலும் 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ண, வண்ண மலர்கள் பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு களித்து வருகிறார்கள். மலர் கண்காட்சிக்கான கட்டணத்தை அரசு குறைத்துள்ளது. பெரியவர்களுக்கு ரூ 150 வசூலித்த நிலையில் தற்போது ரூ 125 வசூலிக்கப்படுகிறது.
சிறியவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படுகிறது என தோட்டக் கலைத் துறை அறிவித்துள்ளது. இந்த மலர் கண்காட்சியை கடந்த 5 நாட்களில் 82 ஆயிரம் பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஊட்டி வருவோர் அங்குள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் வனத் துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஃபாஸ்ட்டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த பணிகள் நாளை முதல் தொடங்குவதால் 7 நாட்களுக்கு அதாவது 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி- கோத்தகிரி சாலையில் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது தொட்டபெட்டா சிகரம். தென்னிந்தியாவில் உயரமான சிகரமாக தொட்டபெட்டா விளங்குகிறது. இதன் உயரம் 2637 மீட்டர் ஆகும். தொட்டபெட்டா என்ற வார்த்தை கன்னடமாகும். தொட்டபெட்டா என்றால் பெரிய மலை ஆகும். இந்த பகுதியை சுற்றி காடாக இருக்கும். இங்கு பல அரிய வகை மூலிகைகளும் இருக்கும். இங்கு இரு தொலைநோக்கிகள் உள்ளன. அதிலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த தொட்டபெட்டாவுமே தெரியும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications