உள்ளாட்சித் தேர்தல்.. சென்னை உட்பட 10 மாநகராட்சிகளுக்கான த.மா.கா வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வாசன்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார்.
அக்டோப்ர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அடுத்த நாளே அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில், நேற்று திமுக, திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 10 மாநகராட்சிகளில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார். 169 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட பின்னர், இன்னும் 3 நாட்களில் முழுமையான பட்டியல் வெளியாகும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலின் படி, சென்னை மாநகராட்சியில் 64 இடங்களிலும், மதுரையில் 10 இடங்களிலும், கோவையில் 8 இடங்களிலும், திருப்பூரில் 40 இடங்களிலும், ஈரோட்டில் 20 இடங்களிலும், தூத்துக்குடியில் 5 இடங்களிலும், தஞ்சையில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 5 இடங்களிலும், திருச்சியில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications