தமிழக அரசு நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கிட ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை வழங்கிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி போன்ற 3 போக சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது. எனவே குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்த நெல் மூட்டைகளை முழுமையாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆனால் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கின்றன. அதிகாரிகள் நெல்லின் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுப்பது விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்.
எனவே, தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை பண்டிகை காலத்தை முன்னிட்டு கால தாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications