குடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. முடங்கியது மன்னார்குடி.. போராட்டத்தில் குதித்த மக்கள்!
மன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதமாக செய்ய கோரியும் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.
Recommended Video

மன்னார்குடி: மன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதமாக செய்ய கோரியும் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மன்னார்குடியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. மீட்பு பணிகளில் அரசின் மெத்தன போக்கை கண்டித்து மறியல் நடந்து வருகிறது.

இல்லை
மன்னார்குடியில் 4 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இல்லை. அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றியுள்ள எந்த கிராமங்களிலும் மின்சார வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் கூட மின்சார வசதி இல்லை. இதனால் மக்கள் அங்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

யாரும் கவனிக்கவில்லை
ஆனால் அரசும் அதிகாரிகளும் இதுவரை அங்கு எட்டி பார்க்கவில்லை. மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அழைத்தும் கூட இதுவரை அங்கு அரசு அதிகாரிகள் வரவில்லை. மன்னார்குடியில் உள்ள இளைஞர்கள் அமைப்பு மட்டுமே மருத்துவ வசதிகளையும், தற்காலிக குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள்தான் உணவு தயார் செய்து கொடுப்பது.

எங்கு எல்லாம் போராட்டம்
இதையடுத்து மன்னார்குடியில் 10க்கு அதிகமான இடங்களில் மறியல் நடக்கிறது. மக்கள் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சித்தேரி, வடபாதி, அசேஷம், தேரடி, தென்பாதி, சோழபாண்டி, பெருகவாழ்ந்தான், மன்னைநகர் உள்ளிட்ட கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சிறைபிடித்தனர்
இந்த போராட்டத்தில் சித்தேரி கிராம மக்கள் அங்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்தனர். தண்ணீர் கொடுக்காமல் எங்கும் நகர கூடாது என்று சிறைபிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்டா பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு வரும் நிலையில் போராட்டம் நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications