தோல்விக்காக உயிரை விடுவது சரியல்ல – காங். தலைவர் ஞானதேசிகன் 'அட்வைஸ்'!
ஜெயங்கொண்டம்: தேர்தல் தோல்விக்காக உயிரை விடுவது சரியல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மனம் உடைந்த அரியலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வினோத் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது படத் திறப்பு விழா வீரக்கன்னில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டு வினோத்தின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் வினோத் பெற்றோரிடம் ரூபாய் 1 லட்சம் நிதியை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசிய அவர், "வெற்றி தோல்வியை மனித வாழ்வில் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாஜ்பாய்க்கு பின் பாஜகவே இல்லை என்ற நிலை இருந்தது.
ஆனால் இன்று பெரும்பான்மையுடன் மோடி பிரதமர் ஆகியுள்ளார். நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும். தோல்வி நிலையானது அல்ல.
தோல்வியில் துவண்டு தொண்டர்கள் உயிரை விடுவது சரியல்ல. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிய சென்னையில் வருகிற 7 ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications