மன்னார்குடி: கல்லூரி பேராசிரியரின் 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை - மனைவி படுகாயம்
மன்னார்குடி: கல்லூரி பேராசிரியரின் இரண்டு குழந்தைகள் மன்னார்குடியில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் தாய் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழஇரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிச்சுந்தரம் (45). இவரது மனைவி பெனிடா (38). இவர்களது குழந்தைகள் கவின்முகில் (13), தமிழிசை (9). மீனாட்சிசுந்தரம் பழனியில் தங்கியிருந்து அரசு கல்லூரி பேராசிரியராகவும், பெனிடா குழந்தைகளுடன் மன்னார்குடியில் தங்கியிருந்து கோட்டூர் அருகே நெம்மேலி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை விடிந்தும் நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த கீழ்வீட்டைச் சேர்ந்தவர்கள் மாடிக்கு சென்று கதவை தட்டினர் ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து பார்த்த போது கவின்முகில், தமிழசை ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.பெனிடா கத்திக்குத்து காயங்களுடன் குளியல் அறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக மன்னார்குடி நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு வந்து பெனிடாவை மீட்டு தஞ்சாவூர் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொலை மற்றும் சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீஸாரின் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை சம்பவம் குறித்து மீனாட்சி சுந்தரத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மன்னார்குடிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications