நடன இயக்குநர் லலிதாமணி வீட்டில் கஞ்சா செடி... போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் திரைப்பட பெண் நடன இயக்குநர் லலிதாமணிக்கு சொந்தமான வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நடன இயக்குனர் லலிதாமணிக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீடு வளசரவாக்கம் வள்ளியம்மை நகர், சாஸ்தா நகர் முதல் தெருவில் உள்ளது.
இங்கு குறும்படம் எடுப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.

மொட்டை மாடியில் கஞ்சா செடி
இங்கு மொட்டை மாடியில் தொட்டிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாகவும், 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸ் ரெய்டு
அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டுக்கு சென்று மொட்டை மாடியில் இருந்த செடிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதனையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 5 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா வளர்த்தவர் அபிஷேக்
இது தொடர்பாக, அங்கு குடியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், நடன இயக்குநர் லலிதாமணியின் உறவினர் அபிஷேக் என்பவர் கஞ்சா செடிகளை வளர்த்தது தெரியவந்தது.

தலைமறைவு
சினிமாவில் உதவி இசையமைப்பாளராக இருக்கும் அந்த நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications