Gas Cylinder Price: அதிரடியாக குறைந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா? ஆனால்..
சென்னை : இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.84.50 விலை குறைந்து ரூ.1,937 ஆக சிலிண்டர் விலை உள்ளது. இதனால் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,180.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து 376-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications