கடுமையான தட்டுப்பாட்டில் சமையல் கேஸ் சிலிண்டர்- இன்னும் 10 நாட்களுக்கு இப்படித்தானாம்!
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இண்டியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிலிண்டகள் பழுதுபார்க்கும் பணிகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர்கள் சர்வீஸ் செய்யப்படுவது அவசியமானதாகும்.

பராமரிப்பு பணிகள்:
3 அல்லது 4 நாட்களுக்குள் பழுது பார்க்கும் பணிகள் முடிவடைந்துவிடும். சிலிண்டர்களும் மீண்டும் விநியோகிக்கத் தொடங்கப்படும்.

மீண்டும் விநியோகம்:
இந்த பணியின் அடிப்படையில், சென்னையில் தினமும் 50 சிலிண்டர்கள் என்ற எண்ணிக்கையில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் விநியோகம் செய்யப்படுகின்றன.

பழசுக்கு புதுசு:
இதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க பழைய சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1 கோடி வாடிக்கையாளர்கள்:
தமிழகம் முழுவதும், 1 கோடியே 4 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 12 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

2 சிலிண்டர்கள்:
இவர்களில் 50 சதவீதம் பேர் 2 சிலிண்டர்கள் வைத்துள்ளனர். 1 லட்சத்து 85 ஆயிரத்து 500 பழைய சிலிண்டர்களை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முழுதும் விநியோகம்:
90 ஆயிரம் சிலிண்டர்கள் சென்னையிலும், மீதம் உள்ள 95 ஆயிரத்து 500 சிலிண்டர்கள் இதர மாவட்டங்களின் மற்ற பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தட்டுப்பாடு தீர 10 நாட்கள்:
டேராடூன், ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து இந்த சிலிண்டர்கள் இன்னும் 3 முதல் 4 நாட்களுக்குள் வந்து சேரும் என்றும், அதன்பிறகு படிப்படியாக 10 நாட்களுக்குள் விநியோகிக்கப்படும். அதனால் சிலிண்டர் தட்டுப்பாடு குறைய இன்னும் 10 அல்லது 15 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications