நான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல் தான்.. பிக்பாஸில் காயத்ரி ஆவேசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல்ஹாசன்தான் என பிக்பாஸ் வீட்டில் காயத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதலே பொது இடம் என்ற நாகரிகமும் நிதானமும் இன்றி சக போட்டியாளர்களை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து வருபவர் காயத்ரி.

ஓவியா குறித்து சேரி பிஹேவியர் எனக்கூறி பெரும் பிளயத்தை கிளப்பினார். மேலும் ஓவியாவையே தொடர்ந்து டார்கெட் செய்த காயத்ரி, பலமுறை கெட்ட வார்த்தைகளை பேசினார்.

ஓவியாவை திட்டிய காயத்ரி

ஓவியாவை திட்டிய காயத்ரி

வெளியே வரட்டும் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்றும் அறை மணிநேரம் கேமிராவை நிறுத்தினால் போதும் அவளை ஒரு வழி செய்து விடுவேன் என்றும் ஓவியாவை மிரட்டினார். பலமுறை ஓவியாவை ஹேர் என்ற வார்த்தையால் திட்டியுள்ளார்.

கண்டிக்காத கமல்

கண்டிக்காத கமல்

இது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. காயத்ரியை கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்தனர்.

காயத்ரியை விசாரித்த கமல்

காயத்ரியை விசாரித்த கமல்

இந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினரின் டார்ச்சரால் ஓவியா வெளியேறிதை தொடர்ந்து தொகுப்பாளரான கமல்ஹாசன் கடந்த வார எபிசோடுகளில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். அப்போது காயத்ரியிடம் கெட்டவார்த்தை பேசியது குறித்து விசாரித்த அவர் காயத்ரியை கண்டித்தார்.

மக்களை தூண்டிவிடுவதே கமல்தான்

மக்களை தூண்டிவிடுவதே கமல்தான்

இந்நிலையில் நேற்று எபிசோடில் கமல் மீது அபாண்டமாக குற்றம்சாட்டினார் காயத்ரி. தான் கெட்ட வார்த்தை பேசுவதாக மக்களிடம் தூண்டி விடுவதே கமல்தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Bigg Boss Tamil, Gayathri Raguram using harsh words on Bharani-Filmibeat Tamil
என்னை திருத்த கமலுக்கு உரிமையில்லை

என்னை திருத்த கமலுக்கு உரிமையில்லை

மேலும் தன்னை திருத்த தனது அம்மாவை தவிர யாருக்கும் உரிமையில்லை என்றும் அவர் கூறினார். மேலும் கமல்ஹாசன் தன்னை எரிச்சல் படுத்துவதாகவும் காயத்ரி கண்டனம் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gayathri slams actor kamal haasan for rectifying her mistakes. Gayathri was using bad words on the other contestants in the biggboss program.
Please Wait while comments are loading...