பாம்பும் பேயும் மல்லுக்கட்டும் நந்தினி... வெற்றி யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் பாம்பு ஒரு பக்கம் நாக்கை துருத்தி கண்களை உருட்டி சீறுகிறது. அதே நேரத்தில் இன்னொரு பக்கம் ஜானகி பேய் கண்களை உருட்டி கோரமாய் சிரிக்கிறது. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது இன்னும் சில எபிசோடுகளில் தெரியவரும்.

இரவு 9 மணி ஆகிவிட்டாலே பல வீடுகளில் பாம்புகள் படையெடுக்க ஆரம்பிக்கின்றன. பேயின் சிரிப்பு சத்தம் கேட்கிறது. எல்லாம் நந்தினி சீரியலின் மகிமைதான். நந்தினி சீரியல் 100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

முன்ஜென்ம கதையெல்லாம் இல்லை. இது இந்த ஜென்மத்து கதைதான். அதுவும் பழிவாங்கும் பாம்பு கதை. பாம்பிடமிருந்து தன் குடும்பத்தை காக்க பாதுகாப்பாக இருக்கிறது ஆவி.

கவர்ச்சி பாம்பு...ஆவி

கவர்ச்சி பாம்பு...ஆவி

சும்மா சொல்லக்கூடாதுங்க. ஆவியாக நடிக்கும் ஜானகியும், பாம்பாக நடிக்கும் கங்காவும் கவர்ச்சியில் போட்டா போட்டி போட்டு நடிக்கின்றனர்.

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

நம் ஊரில் காலம் காலமாக சினிமாவில், சீரியல்களில் வெள்ளை புடவை கட்டிய பேய்கள், ஆவிகளை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு மஞ்சள் நிறத்தில் ஆவி கட்டிய புடவை அசத்தல்தான். ஆவியின் புடவை கலரை மாற்றிய இயக்குநரை பாராட்டலாம். ஆனால் ஒரே கலரில் ஆவியை பார்க்கவும் போராடிக்குமே.

பாம்பும் படு கவர்ச்சிதான்

பாம்பும் படு கவர்ச்சிதான்

இந்தி சீரியல் நாயகிகளுக்கு போட்டியாக நமது தமிழ் சீரியல் நாயகிகளும் இப்போது கவர்ச்சிக்கு மாறி விட்டனர். அதுவும் பாம்பு கங்காவிற்கு அளவெடுத்து ஆடை கொடுக்கிறார் இயக்குநர். சின்னப்பசங்க பார்க்கிற சீரியல், இயக்குநர் கொஞ்சம் கவனிக்கலாம்.

பாம்பு ரொமான்ஸ்

பாம்பு ரொமான்ஸ்

பாம்புகளைப் பற்றி பெருமையாக பேசிய கணவர் அருண் மீது கங்காவிற்கு காதல் வருகிறது. ஆனால் அதை அவளுக்குள் இருக்கும் நந்தினி பாம்பு தடுக்கிறது. கணவன் மீதான காதலில் தவிக்கிறாள் கங்கா. இனி பாம்பின் ரொமான்ஸ் காட்சிகளும் வர வாய்ப்பு உள்ளது.

ஜானகி ஆவி

ஜானகி ஆவி

ஜானகி ஆவி சிறுமி தேவசேனாவிற்குள் புகுந்து கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறது. ஆனால் தேவியோ தன்னுடைய உடம்பிற்குள் ஜானகி ஆவி புகுந்து கொண்டதாக நாடகமாடுகிறாள்.

அய்யோ அய்யோ...

அய்யோ அய்யோ...

இது காமெடி என்ன வென்றால் ஊதுபத்தியை பற்றவைத்து அருணை அடிமையாக்கும் மந்திரவாதி காயத்ரிதான். கண்ணை உருட்டி... காளி... நீலி... மூளி... பத்ரகாளி என்று மந்திர உச்சாடனம் செய்து ஏவுவதும், அது ஜானகி ஆவியின் முன் நிற்காமல் மீண்டும் திரும்ப வந்து காயத்ரியை தாக்குவதுமாக இருக்கிறது.

இனி என்ன நடக்கும்

இனி என்ன நடக்கும்

ஒரே வீட்டிற்குள் பாம்புக்கும், பேய்க்குமான சண்டை தொடங்கி விட்டது. இதில் ஜானகியும், நந்தினியும் மாறி மாறி உருமிக்கொண்டு, சீறிக்கொண்டு இருக்கின்றனர். இனி வரும் எபிசோடுகளில் ஜெயிப்பது பாம்பா, பேயா என்பது தெரியவரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Janaki's spirit comes back to save Rajasheker's family. Without any suspicions, Janaki goes into Devasena's body and stops Nandini. Janaki and Nandini challenge each other whether the family will be saved or killed.
Please Wait while comments are loading...