சென்னையில் பயங்கரம்... 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 24 வயது காமக்கொடூரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 2 வயது குழந்தையை 24 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பெருங்குடி கள்ளுகுட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் இரண்டு வயது மகளை நேற்று மதியம் முதல் காணவில்லை. எனவே, அக்கம்பக்கத்தில் அக்குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.

Girl, 2, raped by 24-yr-old neighbour

அப்போது அருகில் இருந்த வீடு ஒன்றில் வாய் கட்டப்பட்ட நிலையில் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது குழந்தையின் பிறப்பிறுப்பில் ரத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத்துவமனைகள் மறுத்தையடுத்து நீண்ட போராட்டத்திற்குப்பின், இரவு 9மணியளவில் அவர் திருவல்லிகேணி தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சிகிச்சை திருப்திகரமானதாக இல்லை என ஆர்.எம்.ஓ.விடம் கள்ளுக்குடி மக்கள் நலச் சங்கத்தின் செயலாளர் ஆனந்தன் முறையிட்டிருக்கிறார்.

அதற்கு, 'குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் பெரிய அளவிளான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அளித்து இருப்பதாகவும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அதன் பின்னர் உறுதிபடுத்துவதாகவும்' மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்திருக்கிறது.

இதற்கிடையே போலீசாரின் விசாரணையில் வெளியூரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த விஜி என்ற இளைஞன் அந்த சிறுமியை வண்கொடுமை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Thoraipakkam police filed two cases against a 24-year-old man, who has been accused of molesting a two-and-a-half-year-old girl in Chennai Perungudi on Monday.
Please Wait while comments are loading...