15 வயது மாணவியை நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன்.... வீட்டில் அடைத்து வைத்து கொடூரம்....
சேலம் : வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாழப்பாடி காவல் நிலையம் அருகே செயல்படும் அரசு விடுதியில் அதே பகுதி மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பை அதே பள்ளியில் தொடர திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பிய மாணவி, அதன் பின்னர் திடீரென மாயமானார்.
இது குறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அப்போது, மாணவியின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளனர். போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, செல்போன் ஆன் செய்வதும், ஆப்செய்வதுமாக இருந்ததால் குழப்பம் அடைந்தனர்.
இதையடுத்து, செல்போன் எண் பதிவாகும் டவர் பகுதியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த மாணவி வாழப்பாடி புறவழிச்சாலை பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாழப்பாடி காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் மாணவியை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. உடனே, போலீசார் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு, மாணவி ஆடை கிழிந்த நிலையில் அலங்கோலமாக தவித்துக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
உடனே, அவரை மீட்டு வந்து காவல் நிலையத்தில் போலீசார் வைத்து விசாரித்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 1 ஆம் தேதி முதல் 2 நாட்கள் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து அவரது காதலன் உள்பட 6 பேர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வாழப்பாடியில் படித்து வந்த மாணவிக்கும், பேருந்து நிலைய பகுதியில் உள்ள பேக்கரி கடையில் பணியாற்றி வரும் 19 வயது இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியில் புறப்பட்ட மாணவி கோணஞ்செட்டியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பகல் வேளையில் வாழப்பாடிக்கு வந்து காதலனுடன் சுற்றித்திரிந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி வாழப்பாடிக்கு வந்துவிட்டு கோணஞ்செட்டியூருக்கு திரும்ப நேரமாகி விட்டதால், வாழப்பாடி புறவழிச்சாலை பகுதியில் தனது நண்பர் ஒருவரது வீட்டில் தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என மாணவியிடம் காதலன் கூறியுள்ளார். இதனை நம்பி மாணவியும் அங்கு சென்று தங்கியுள்ளார்.
இது குறித்து அவரது காதலன் தனது நண்பர்கள் 5 பேருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார். பின்னர், அவர்களுக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளார். 6 பேரும் சேர்ந்து மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து 19 வயதான காதலன் மற்றும், அவரது நண்பர்களான குமார், அவரது சகோதரர் வினோத்குமார், இளங்கோ, உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதையடுத்து, பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications