சேலத்தில் ஆசை ஆசையாய் பைக்கில் பார்க்க வந்த காதலன்.. நடந்த சோகம்.. காதலி செய்த விபரீதம்
தர்மபுரி: காதலியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு சென்று கொண்டிருந்த காதலன் லாரி மோதி உயிரிழந்த நிலையில், காதலியும் தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தார்.. இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காதலன் இறந்த நிலையில், காதலியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கோவையில் பணியாற்றிய காதலி, சேலம் வந்த நிலையில், அவரை பார்கக இருசக்கர வாகனத்தில் காதலன் வந்தபோது உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் மோளையானூரை சேர்ந்தவர் ஆதித்தன் என்ற கூலி தொழிலாளியின் மகள் அகல்பிரியா (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
அகல்பிரியாவும், கட்டரசம்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தீபாவளிக்கு அகல்பிரியா சொந்த ஊருக்கு வந்தார். தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த 14-ந் தேதி அவர் கோவைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காதலன் ஸ்டாலினுக்கு போன் செய்து சேலம் வருமாறு கூறிவிட்டு பேருந்தில் சேலத்திற்கு சென்றார்.
இதையடுத்து காதலியை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு சென்று கொண்டிருந்த ஸ்டாலின் அயோத்தியா பட்டணம் பகுதியில் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்து அவரது காதலி அகல்பிரியா கதறி அழுதார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் கடந்த 15-ந் தேதி தூக்க மாத்திரை மற்றும் விஷ கொட்டை தின்று விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அகல்பிரியாவை மீட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications