பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு முன்னுரிமை தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழாசிரியர்களின் நிலை....
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின் படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

772 பேர் மட்டுமே...
அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

திட்டமிட்டு குறைப்பு...
6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர். இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டு மின்றி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடை முறையும் உள்ளது. இதன் மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன.

தகுதித் தேர்வில் தேர்ச்சி...
ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் வெறும் 772 பேருக்கு மட்டுமே இப்போது வேலை வழங்கப்படுகிறது.

தவறான கொள்கை...
தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை அதிக அளவில் நியமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போதிலும், ஆசிரியர் நியமனத்தில் அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கையால் தான் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை குறைகிறது.

கட்டாயம்...
ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழை முதலிடத்திற்கு கொண்டு வந்தால் அனைத்து பள்ளிகளிலும் ஒரு தமிழாசிரியர் கட்டாயமாக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

தமிழுக்கு முதலிடம்...
தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும். இதன்மூலம் தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications