எங்க கட்சியில்தான் இளைஞர்கள் அதிகம்.. பெருமிதம் காட்டும் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழக கட்சிகளிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
புதிதாகப் பிறந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதைத் தீவிரப்படுத்துவதற்காக இளைஞரணி பொறுப்பாளர் எம். யுவராஜா தலைமையில் பேருந்துப் பிரசாரப் பயணம் தொடங்கியுள்ளது.

இந்தப் பயணத்தை சென்னை ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை அருகே இன்று ஜி.கேவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,
திருச்சியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தொடக்க விழா பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருச்சியில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் இந்தியத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். கடந்த 50 நாள்களுக்குள் தமிழகம் முழுவதும் 32 லட்சம் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மகத்தான சாதனையாகும்.
தமிழக அரசியல் கட்சிகளில் அதிகமான இளைஞர்களைக் கொண்ட கட்சி தமாகா மட்டுமே. திருச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களில் 50 சதவீதம் பேர் இளைஞர்கள். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் தமாகாவில் உறுப்பினர்களாக இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்காக யுவராஜா தலைமையில் இளைஞரணி பொறுப்பாளர்கள் நடத்தும் இந்த பேருந்து பிரசாரப் பயணம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது.
20 மாவட்டங்கள், 103 சட்டசபைத் தொகுதிகள், 6 மாநகராட்சிகள், 500-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் வழியாக 2,000 கிலோ மீட்டர் இந்தப் பயணம் செல்கிறது. இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் தமாகாவில் இணைவார்கள் என்றார் ஜி.கே.வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications