கூட்டணி பற்றி ரொம்ப லேட்டா முடிவெடுத்துவிட்டோம்.. நானே பொறுப்பு... வருந்தும் வாசன்
சென்னை: கூட்டணி குறித்து இறுதி முடிவெடுப்பதில் மிகவும் தாமதமானதற்கு தாமே பொறுப்பு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் தேமுதிக-ம.ந.கூட்டணியில் தமாகா கடைசி நேரத்தில் இணைந்தது. அக்கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சென்னையில் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான வித்தியாசமான சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழலில் ஆட்சி மாற்றத்தில் த.மா.கா.வும் பங்கெடுத்து அடித்தளமாக விளங்கும். மக்கள் நலக்கூட்டணி மன நிறைவான கூட்டணி. மகிழ்ச்சியான கூட்டணி.
தாமதத்துக்கு நானே பொறுப்பு
கூட்டணி குறித்து தாமதமாக முடிவு எடுத்ததற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். உரிய நேரத்தில் நியாயமான இந்த கூட்டணிக்கு செல்ல முடியவில்லை. தாமதமாக சென்றாலும் எங்களை வரவேற்று அவர்களுடைய தொகுதிகளை பிரித்து எங்களுக்கு 26 தொகுதிகள் வழங்கியதை நன்றியுடன் பார்க்கிறேன்.
வருத்தம் இருக்கலாம்...
பொதுவாக எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும் என்பதில் கூட்டணி கட்சியிடம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் கிடைத்த தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைப்போம்.
வேட்பாளர் பட்டியல் எப்போது?
கூட்டணி பற்றி கட்சியில் இருந்த ஒரு சிலர் மட்டும் மாற்று கருத்தோடு வேறு கட்சிகளுக்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் நல்ல முறையில் இருக்க வேண்டும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
வருகிற 20-ந்தேதி தஞ்சையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். 150 தொகுதிக்கு மேல் பிரசாரம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வாசன் கூறினார்.
த.மா.கா. சிறுபான்மை பிரிவு மாநில தலை
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications