தமாகாவை பலவீனப்படுத்தும் வகையிலான பேட்டிகளை ஏற்க முடியாது: பீட்டர் அல்போன்ஸுக்கு வாசன் வார்னிங்
மதுரை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் டிவி, பத்திரிகைகளுக்கு யார் பேட்டி கொடுத்தாலும் அதை ஏற்க முடியாது என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது என்பது தமாகாவின் இறுதி முடிவு. இந்த முடிவை ஏற்பதுதான் தமாகாவின் வளர்ச்சிக்கு சரியானதாகும்.

கூட்டணி முடிவை ஒருசிலர் ஏற்காமல் இருப்பது என்பவர் அவரவர் விருப்பம். அதற்காக தமாகாவை பலவீனப்படுத்தும் வகையில் பேட்டிகளை யார் கொடுத்தாலும் ஏற்க முடியாது.
தமாகாவில் இருந்து யாரும் விலகி காங்கிரஸில் சேரவில்லை. காங்கிரஸை விட்டு த.மா.கா வெகுதூரம் சென்றுவிட்டது. ஆகையால் எங்களைப் பற்றி அவர்கள் அச்சப்பட வேண்டாம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்ததை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் ஜிகே வாசன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications