சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு… முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்
சென்னை: சென்னையில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இரண்டாம் நாளான இன்று பல்வேறு கருத்தரங்கங்கள் நடந்தன. தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2ம் நாளான இன்று, காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, முதல் கட்ட கருத்தரங்கங்கள் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023 அடிப் படையில், மிகப்பெரிய கட்ட மைப்பு திட்டங்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆகியவை கன்வன்ஷன் அரங்குகளில் நடைபெற்றன.
மற்ற 6 கருத்தரங்க அரங்குகளில், தமிழ்நாடு - பொறியியல் துறையில் உலக மையம், தமிழ்நாடு - வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்புகள், தமிழ்நாடு - தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
இதுதவிர, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் முதலீடுகள் குறித்த கருத்தரங்கங்கள் நடக்கின்றன. பகல் 12 மணிமுதல் 2 மணி வரை, தமிழகத்தில் மின்சாரம் மற்றும் நீர்வளம், திறன் மேம்பாடு, மருந்து தயாரிப்பு மற்றும் உயிர் தொழில்நுட்ப துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், ஜவுளித்துறையில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கொரிய நாட்டு முதலீடு தொடர்பான கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
மேலும், தமிழகத்தில் உள்ள தொழில் பெருவழித்தடங்கள், தொழில்பூங்காக்கள், முதலீட்டு மண்டலங்கள் குறித்த கருத்தரங்கம், அமெரிக்க - இந்திய தொழில் கவுன்சில் மற்றும் இத்தாலி நாட்டு முதலீடு தொடர்பான கருத்தரங்கங்களும் நடைபெற்றன.
பிற்பகல் 2 மணி முதல் 3.15 வரை, தமிழகம் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் பேசினர் மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் தொழில்துறை அமைச்சர் தங்கமணி பேசினார். முதல் வர் ஜெயலலிதா பங்கேற்று நிறைவு உரை நிகழ்த்தினார். பெறப்பட்ட முதலீடுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.


Click it and Unblock the Notifications
