இளங்கோவனைக் கட்டிப்பிடித்து, கை குலுக்கி வாழ்த்திய ஞானதேசிகன்!
சென்னை: தமிழக காங்கிரஸ் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கட்டிப் பிடித்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார் பதவி விலகிய தலைவரான ஞானதேசிகன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று இளங்கோவன் புதிய தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது வித்தியாசமான பல காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

ஞானதேசிகன் ஆஜர்
கட்சித் தலைமை மீது சரமாரியான புகார்களைக் கூறி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜி.கே.வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன் வந்திருந்தார்.

கட்டிப்பிடித்து கை குலுக்கி
அவர் இளங்கோவனை கட்டிப்பிடித்து, கைகுலுக்கி வாழ்த்தி வரவேற்றார்.

குமரியார்
மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கியபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமரி அனந்தன் வந்திருந்தார்.

ஜெயந்தி நடராஜன்
ப.சிதம்பரத்தின் தீவிர எதிர்ப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வந்திருந்து இளங்கோவனை வாழ்த்தினார்.

குமரி அனந்தன் தம்பியும்
குமரி அனந்தனின் தம்பியும், தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருமான எச்.வசந்தகுமாரும் வந்திருந்தார்.

விஜயதாரணி
தனிக் கோஷ்டியாக செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ. விஜயதாரணி வந்திருந்து இளங்கோவனை வாழ்த்தினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications