தமிழைப் போல இந்தியும் மாநில மொழியே... டிவி விவாதத்தில் மூக்குடைத்த ஞாநி- வைரலாகும் வீடியோ
தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி.
Recommended Video

சென்னை : தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில் பேசுவேன் என்று தைரியமாக சொன்னவர் ஞாநி. அவர் மறைந்த நாளில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
எழுத்தாளரும் பிரபல பத்திரிக்கையாளருமான ஞாநி சங்கரன் இன்று காலமானார். 2015-ம் ஆண்டு என்டிடிவியின் பிரபல விவாத நிகழ்ச்சியான 'பிக் ஃபைட்' நிகழ்ச்சியில் இந்தியை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது.
இதில் இந்தி மொழியின் பெருமை குறித்து பேச வந்த பெண் பேச்சாளர் இந்தி மொழியில் விவாதத்தில் பேச, அவர் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தவர் ஞாநி.

வலுவான எதிர்ப்பை பதிவு செய்த ஞாநி
இது ஆங்கில நிகழ்ச்சி உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் போது ஏன் இந்தியில் பேசுகிறீர்கள் என்று ஞாநி அந்த பெண் பேச்சாளரிடம் கேட்டார். நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியவரும் பெண் பேச்சாளரை ஆங்கிலத்தில் பேச வலியுறுத்த அதை மறுத்த அந்த பெண் தொடர்ந்து இந்தியிலேயே பேசினார்.

இந்தி திணிப்பை எதிர்த்தவர்
இதனால் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்த ஞாநி, அவர் இந்தியில் பேசினால் தானும் தமிழில் பேசுவேன் என்று தமிழில் பேசினார். ஞாநியின் வாதம் சரியே என்று மற்றொரு பேச்சாளர் தன்னுடைய தாய்மொழியான தெலுங்கில் பேசத் தொடங்கினார். தமிழகம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி வருவதாக கூறினார். இந்தி திணிப்பை மட்டுமே தமிழகம் எதிர்ப்பதாகவும் மாற்று மொழியாக அதனை கற்க எந்தத் தடையும் இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது என்பதையும் பதிவு செய்தவர் ஞாநி.

இந்தியும் ஒரு பகுதி மொழி தான்
"தமிழை மாநில மொழி என்று அழைப்பதை எதிர்க்கிறோம், ஏனெனில் தமிழ் மாநில மொழி என்றால் அதே போன்று தான் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஏன், இந்தி கூட மாநில மொழி தான் என்று உரக்கச் சொன்னவர். மராத்தி, வங்காள மொழி போல இந்தியும் ஒரு பகுதியின் மொழி தான் என்றும் அவர் பேசி இருந்தார்.
வைரலாகும் வீடியோ
இந்தி திணிப்பிற்கு எதிராக திண்ணமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த ஞாநியின் இந்த விவாதப்பேச்சு அவரின் திடீர் மறைவையொட்டி சமூக வலைதளத்தில் அவரது சிறப்பை உணர்த்தும் விதமாக பதிவிடப்பட்டு வருகிறது. ஞாநியின் வாழ்க்கைப் பயணத்தில் இந்த விவாத நிகழ்ச்சி ஒரு முக்கியமான குறிப்பிடும்படியான விவாதமாக அமைந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications