டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையத்தை அணுக ஹைகோர்ட் அறிவுறுத்தல்
டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கு விசாரணையையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்த வைத்துள்ளது.
சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவின் கட்சி அதிகாரமும் ஆட்சி அதிகாரமும் சசிகலா குடும்பத்தினரின் வசம் சென்றுள்ளது.

தினகரனுக்கு எதிராக வழக்கு
இது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்
சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி. தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட தடை என்ற தேர்தல் நடத்தை விதியை திருத்த வேண்டும். வழக்கில் தொடர்பு இருந்தாலோ அல்லது வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் விதிக்கப்பட்டாலோ தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் எற்க கூடாது
தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜோசப் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேர்த்ல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தல்
அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கு விசாரணையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications