ஸ்டாலின் பேச்சை வைத்து பார்க்கும்போது திருநாவுக்கரசருக்கு தோன்றியது இதுதானாம்!
Recommended Video

சென்னை: பாரதிய ஜனதா கட்சி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சை வைத்து பார்க்கும்போது காங்கிரஸ் கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது என்பது உறுதியாகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் இன்று காலை அளித்த பேட்டி: அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் வாய்ப்பு கிடையாது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்க பாரதிய ஜனதா கட்சியின் முயற்சிகளில் ஈடுபடுகிறது. ஆனால் அவர்களுக்கு அதில் வெற்றி கிடைக்காது.

பாரதிய ஜனதா கட்சி குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசிய பேச்சை வைத்து பார்க்கும்போது காங்கிரஸ் கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது என்பது உறுதியாகிறது என்றார் திருநாவுக்கரசர்.
திமுக தலைவராக நேற்று பதவியேற்ற ஸ்டாலின், "மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்றும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா" என்று, பேசினார்.
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு திமுக சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. எனவே, பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நினைவேந்தலுக்கு அமித்ஷா வருவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் ஸ்டாலினும் பாஜகவை விமர்சித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications