நெல்லை அருகே ரூ.1.56 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்
நெல்லை: திருநெல்வேலி அருகே இன்று வாகனச் சோதனையில் ரூ. 1.56 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்புக்குழு வீதம் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் மேலப்பாளையம் கருங்குளம் சோதனைச் சாவடியில் நேற்று நிலைக் கண்காணிப்புக்குழு அதிகாரி து.கருப்பசாமி தலைமையில் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொலிரோ காரில் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரத்தில் உள்ள ஜூவல்லரி கடைக்கு 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.56 கோடி ஆகும்.
உடனடியாக தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கொண்டு சென்ற நகைகளுக்கு உரிய ஆவணங்களை ஜூவல்லரி உரிமையாளர் சமர்ப்பித்தனர். இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் ஒப்படைக்கப்பட்டது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications