தங்க நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும் ட்விஸ்ட்.. ஆடிப்போக வைத்த நகை மதிப்பீட்டாளர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதுத்தெருவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர்,மயிலாடுதுறையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தன்னுடன் நன்றாக பழகியவர்களிடம், நகைகளை கொடுத்து அடகு வைத்து தருமாறு கூறியிருக்கிறார். அப்படி இவர் கொடுத்து அடகு வைத்த நகைகள் எல்லாம் போலி என்பது தெரியவந்துள்ளது. இப்படி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி செய்தவர் கடைசியில் சிக்கி கொண்டார். இப்போது நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற விரும்புவோருக்கு அதிக பணம் கிடைத்து வருகிறது. ஏனெனில் தங்க நகையின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. அதேநேரம் போலி நகைகளை அடகு வைத்து நகை மோசடி செய்வது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதைதடுக்க வங்கிகள் கடுமையான விதிமுறைகளைபின்பற்றியே நகைகளை மதிப்பீடு செய்து கடன் வழங்குகின்றன. ஆனால் சில நகை மதிப்பீட்டாளர்கள் போலி நகைகளுக்கு பணம் கொடுப்பது எப்போதாவது ஒருமுறை நடக்கிறது. அப்படித்தான் மயிலாடுதுறையில் நடந்தது. ஆனால் நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை வாடிக்கையாளர் பெயரில் அடகு வைத்து அவரே பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறை புதுத்தெருவை சேர்ந்த 57 வயதாகும் ஜீவானந்தம் என்பவர் மயிலாடுதுறையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். வங்கியில் நகைகளை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஜீவானந்தம் நன்றாக பழகி அவர்களிடம் தனது நகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களின் பெயரில் அடகு வைத்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.
இதை நம்பிய வாடிக்கையாளர்களில் சிலர் ஜீவானந்தம் தந்த தந்த நகைகளை(போலி நகைகள் என தெரியாமலேயே) அடகு வைத்து வங்கி ஆவணங்களில் கையொப்பமிட்டிருக்கிறார்கள். அந்த போலி நகைகளுக்கான தரம் பற்றிய உண்மை சான்றிதழை மோசடியாக அசல் தங்க நகைகளுக்கு உள்ளது போல ஜீவானந்தம் அளித்திருக்கிறாராம். வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைத்த போலி நகைகளுக்கான நகை கடன் ரசீதுகளை ஜீவானந்தம் தானே வைத்துக்கொண்டு காலக்கெடுவுக்கு ஏற்றார்போல வெவ்வேறு வாடிக்கையாளர்களின் பெயரில் மாற்றி வைத்து மோசடி செய்து வந்திருக்கிறாராம்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளின் தரம் மற்றும் மதிப்பை உறுதி செய்வதற்காக மதுரை மண்டல அதிகாரிகள் வங்கியில் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அந்தவகையில்அண்மையில் ஆய்வுக்கு வந்த போது, நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தம் செய்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி கிளை மேலாளர் தினேஷ், மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்போில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.41 லட்சத்து 23 ஆயிரத்து 721-ஐ ஜீவானந்தம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகை மதிப்பீ்ட்டாளர் ஜீவானந்தத்தை கைது செய்த போலீசார், அவரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications