குக்கருக்குள் வைத்து 3 கிலோ தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 4பேர் சிக்கினர்
சென்னை: குக்கருக்குள் வைத்து, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 4.2 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வந்த விமான பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் ஸ்கேன் செய்து பார்த்தபோது, சமையல் குக்கர் ஒன்றிற்குள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
குக்கருக்குள் அறைபோன்ற பகுதியை உருவாக்கி அதற்குள் தங்கம் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 3 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் பண மதிப்பு ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
தங்கத்தை கடத்தி வந்த, சென்னையை சேர்ந்த பீர் முகமது, நைனா முகமது, பஷீர் கான், குரேஷி ஆகியோர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றாவது நகரும் சுமைதூக்கி அருகில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் தங்கத்தை கொண்டு வந்தது யார் என்று கண்டுபிடிக்க, விமான நிலைய சிசிடிவி காட்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியை தாண்டும் என்று சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications